2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய ஊழியர்கள்; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-10-01 01:33 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த குழந்தையின் வகுப்பறையில் இருந்து அழுகுரல் கேட்டுக்கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள். பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு முன்னதாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்