பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ரூ.1 லட்சம் நூதன மோசடி

திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்யும் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ஒரு நபரிடம் ரூ.1 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.

Update: 2023-04-17 18:45 GMT

மங்களூரு-

திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்யும் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ஒரு நபரிடம் ரூ.1 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.

பகுதி நேர வேலை

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி ஒருவரிடம் ரூ.1.14 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தியில் இது திரைப்படங்களை மதிப்பீடு செய்யும் வேலை ஆகும், நாங்கள் அனுப்பும் இணையதள லிங்கில் சென்று திரைப்படங்களுக்கு மதிப்பீடு செய்தால் அதற்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதையடுத்து 6-ந் தேதி ஒரு லிங்க் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு இருந்தது. அதை திறந்து பார்த்த பாதிக்கப்பட்ட நபர் அந்த லிங்கில் சென்று வீடியோக்களை பார்த்து மதிப்பெண்ணும் வழங்கினார். அதன்மூலம் அவருக்கு ரூ.1,000 கமிஷன் வழங்கப்பட்டது. பின்னர் இந்த பகுதி நேர வேலையில் தொடர ரூ.10 ஆயிரத்து 500 முன்பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பாதிக்கப்பட்டவர் ரூ.10 ஆயிரத்து 500-ஐ முன்பணமாக செலுத்தினார்.

மோசடி

அதன்பின்னர் அடுத்தடுத்த நாட்களில் ரூ.29 ஆயிரத்து 936, ரூ.74 ஆயிரத்து 465 ஆகியவற்றை முன்பணமாக செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் பாதிப்புக்கு உள்ளான நபரும் பணத்தை செலுத்தினார். ஆனால் அவருக்கான கமிஷன் தொகை வரவில்லை. இதுபற்றி கேட்டபோது மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.

அப்போதுதான் தான் மோசடி வலையில் விழுந்ததை பாதிப்புக்கு உள்ளான நபர் உணர்ந்தார். பின்னர் இதுபற்றி அவர் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்