பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் குடிபோதையில் விமானத்தில் ஏறினாரா...? மத்திய அரசு விசாரணை

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் குடிபோதையில் விமானத்தில் ஏறினாரா...? மத்திய அரசு விசாரணை

Update: 2022-09-20 08:42 GMT

புதுடெல்லி

ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் இருந்து லூப்தான்சா விமானம் மூலம் பஞ்சாப் முதல் மந்திரி பக்வந்த் மான் டெல்லிக்கு வர இருந்தார். இருப்பினும், அவர் குடிபோதையில் இருந்ததாகவும் இதனால் அவர் விமானத்தில் இருந்து அவர் இறக்கிவிடப்பட்டதாகும் தகவல் வெளியானது.

பக்வந்த் மானனின் இந்த் செயல் ஒட்டுமொத்த பஞ்சாபியர்களையே அவமானப்படுத்திவிட்டதாகப் பஞ்சாப் எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக குற்றம்சாட்டின.

பக்வந்த் மான் குடிபோதையில் இருந்ததாகவும் இதனால் விமானம் 4 மணி நேரம் தாமதம் ஆன மட்டுமின்றி அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகும் எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியிருந்தார். இது தொடர்பாக அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தனது டுவிட்டரில், "பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் குடிபோதையில் இருந்ததால் லூப்தான்சா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக சக பயணிகள் கூறும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 4 மணி நேரம் விமானம் தாமதம் ஆனது.

இதன் காரணமாகவே அவரால் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்களை அவர் அவமானப்படுத்திவிட்டார்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி விளக்கம் அளித்து உள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் உடல்நலக்குறைவு காரணமாகவே அந்த விமானத்தில் டெல்லி வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் ஆம் ஆத்மி விளக்கம் அளித்து உள்ளது. மேலும்,லூப்தான்சா விமான நிறுவனம் அளித்த விளக்கத்தையும் அவர்கள் பகிர்ந்து உள்ளனர்.

அதில் இணைப்பு விமானம் வரத் தாமதம் ஏற்பட்டதே டெல்லி செல்லும் விமானம் 4 மணி நேரம் தாமதமாகப் புறப்படக் காரணம் என்று லூப்தான்சா விமான நிறுவனம் விளக்கம் அளித்து உள்ளது. பஞ்சாப் முதல் மந்திரி குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்புவதை எதிர்க்கட்சிகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் பக்வந்த் மான் சிங் குடிபோதையில் இருந்ததால் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரிக்க உள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, "இது சர்வதேச விவகாரம். உண்மைகளை நாங்கள் சரிபார்க்க வேண்டும். தரவுகளை வழங்குவது லூப்தான்சாவைச் சார்ந்தது. எனக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நான் நிச்சயமாக இது குறித்து விசார்ரிப்பேன் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்