ஆசிரியை பாலியல் புகார்: கேரளாவில் எழுத்தாளர் சீவிக் சந்திரன் கைது
லப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரபல எழுத்தாளர் சீவிக் சந்திரன் மீது கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி கோழிக்கோட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக மலப்புரத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் போலீசில் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சீவிக் சந்திரன் மீது, பெண்களை இழிவுபடுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரது முன் ஜாமீனை கேரள ஐகோர்ட்டு ரத்து செய்தது. அத்துடன் வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் ஆஜராகும்படி ேகார்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சீவிக் சந்திரன் தனது வக்கீல் மூலம் நேற்று காலை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரை கைது செய்த போலீசார், கோழிக்கோடு செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.