உலகின் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்கள்; முதல் இடம் பிடித்த டெல்லி

உலகில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் தீபாவளியன்று இந்தியாவின் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.

Update: 2022-10-25 03:42 GMT



புதுடெல்லி,


உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உதவிடவும் வகையில் 2007-ம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு, ஆசிய நாடுகளில் அதிக மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம் பெற்று அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதன்படி, உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை கொண்ட நாடுகளின் வரிசையில் கத்தாருக்கு அடுத்து இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தர குறியீடு அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலின்படி, தீபாவளி நாளில் அதிக மாசுபாடுடைய நகரங்களின் வரிசையில் டெல்லி முதல் இடம் பிடித்து உள்ளது என தெரிவித்து உள்ளது. இதற்கு அடுத்து, பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் 2-வது இடத்தில் உள்ளது.

உலக அளவில் தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இதனால், மனிதர்களுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுவதுடன், அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது என்றும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

எனினும், இந்த டாப் 10 பட்டியலில் தலைநகர் டெல்லி இடம் பெறவில்லை என உலக காற்று தர குறியீடு அமைப்பு தகவலை அடிப்படையாக வைத்து, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

டெல்லியில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வுகள், கடந்த ஆண்டு இதே நேரத்தில் 15 சதவீதம் என இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அது 2 முதல் 3 சதவீதம் என்ற அளவில் குறைந்து உள்ளது என்ற தகவலையும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இருப்பினும், டெல்லியில் காற்றின் தரம் ஒட்டுமொத்த அளவில் இன்று 323 புள்ளிகளாக (மிக மோசம்) உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்