டெல்லி விமான நிலையத்தில் சக்கர நாற்காலியில் வந்த பெண் பயணியிடம் கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்கள்

அந்தப் பெண்மணியால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. உரிய ஆவணங்களையும் காண்பிக்க இயலவில்லை.

Update: 2022-08-24 22:20 GMT

புதுடெல்லி, 

டெல்லி விமான நிலையத்துக்கு மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இருந்து ஒரு இண்டிகோ விமானம் நேற்று அதிகாலை வந்தது.

அந்த விமானத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்து பயணித்து வந்த ஒரு 50 வயது பெண் பயணி, அதே விமான நிறுவனத்தின் இணைப்பு விமானத்தில் துபாய் செல்ல தயாராக இருந்தார்.

அவரை டெல்லி விமான நிலையத்தின் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் பரிசோதித்தனர்.

அப்போது அப்பெண்மணி தனது உள்ளாடைகளுக்குள் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 32 ஆயிரத்து 300 அமெரிக்க டாலர் நோட்டுகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

அதுகுறித்து அந்தப் பெண்மணியால் சரியான விளக்கம் அளிக்க முடியவில்லை. உரிய ஆவணங்களையும் காண்பிக்க இயலவில்லை.

எனவே அவரை விமானத்தில் இருந்து இறக்கிய மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், மேலதிக விசாரணைக்காக சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்