கொல்கத்தா மியூசியத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் துப்பாக்கி சூடு: துணை ராணுவ வீரர் பலி; பலர் காயம்

கொல்கத்தா மியூசியத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் துணை ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார்.

Update: 2022-08-06 15:32 GMT



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் மியூசியம் ஒன்று உள்ளது. நகரின் மைய பகுதியில் அமைந்த மியூசியம், மத்திய கலாசார அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் சுயாட்சி அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

2019-ம் ஆண்டு முதல் இந்த மியூசியம் ஆனது, மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது. இந்த நிலையில், போலீசாரின் கார் ஒன்றின் மீது மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைவர் ஒருவர் இன்று மாலை திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் துணை ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார். காரின் ஓட்டுனர் உள்பட போலீசார் பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்