பா.ஜ.க. எம்.பி. ராகுல் கஸ்வான் காங்கிரசில் இணைந்தார்

எம்.பி ராகுல் கஸ்வான் பா.ஜ.க.,வில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Update: 2024-03-11 09:28 GMT

ஜெய்ப்பூர்,

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தானின் சுரு தொகுதி பா.ஜ.க. எம்.பி. ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

எம்.பி ராகுல் கஸ்வான் பா.ஜ.க.,வில் இருந்து விலகுவதாகவும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், "மக்களவை உறுப்பினராக 10 ஆண்டுகள் சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி நட்டா. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ராகுல் கஸ்வான். நேற்று, அரியானா மாநிலத்தில் பா.ஜ.க. எம்.பி பிரிஜேந்திர சிங் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரு மக்களவை தொகுதியில் 2 முறை எம்.பி.,ஆக இருந்த கஸ்வானுக்குப் பதிலாக பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா போட்டியிட பா.ஜ.க. சார்பில் சீட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்