லடாக் எல்லை அருகே பறந்து சென்ற சீன போர் விமானம்
நம் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் பறந்து வந்து திரும்பி உள்ளது. இதை நம் ராணுவத்தினர் நேரடியாக கண்டுள்ளனர்.;
புதுடெல்லி,
கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு நாள், அதிகாலை 4:00 மணிக்கு, சீன ராணுவத்தின் போர் விமானம், நம் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் பறந்து வந்து திரும்பி உள்ளது. இதை நம் ராணுவத்தினர் நேரடியாக கண்டுள்ளனர்.
மேலும், 'ரேடார்' வாயிலாகவும் இது பதிவாகி உள்ளது. இதையடுத்து, நம் போர் விமானங்கள், ஆயுதங்கள் உடனடியாக தயார் நிலைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய பகுதியில், சீன ராணுவம் போர் விமான பயிற்சியில் ஈடுபட்ட போது, இந்திய பகுதிக்கு மிக அருகே அவர்கள் விமானம் வந்து சென்றது தெரியவந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்களால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றாலும், இது தேவையற்ற பதற்றத்தையும், சண்டையையும் துாண்டிவிட வாய்ப்புள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.