டோக்லாம் பகுதியில் சீனா புதிதாக எதையும் கட்டவில்லை கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி சொல்கிறார்

2017-ம் ஆண்டு அப்பகுதியில் சீனா சாலை அமைத்ததால், பிரச்சினை ஏற்பட்டது.;

Update: 2022-12-16 19:18 GMT

கொல்கத்தா, 

கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி ஆர்.பி.கலிடா, நேற்று கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனா கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறதா? என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர் கூறியதாவது:-

2017-ம் ஆண்டு அப்பகுதியில் சீனா சாலை அமைத்ததால், பிரச்சினை ஏற்பட்டது. 73 நாட்களாக இருநாட்டு படைகளிடையே மோதல் நிலவியது. பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்சினை தீர்க்கப்பட்டது.தற்போது, டோக்லாம் பகுதியில் இந்தியாவோ, சீனாவோ எந்த உள்கட்டமைப்பு பணிகளிலும் ஈடுபடவில்லை. ஏதேனும் பிரச்சினை எழுந்தாலும், உள்ளூர் மட்டத்தில் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்