ஆக்ராவில் காணாமால் போன இரண்டரை வயது குழந்தை; சி.சி.டி.வி. காட்சியால் மதுராவில் மீட்கப்பட்டது
சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தையை ரிக்ஷாவில் வைத்து ஒருவர் கடத்திச் செல்வது தெரியவந்தது.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் ஷாகன்ச் பகுதியில் வசித்து வரும் ஜெய்பிரகாஷ் என்ற நபரின் இரண்டரை வயது குழந்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்த குழந்தை காணாமல் போனது.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, குழந்தையை ரிக்ஷாவில் வைத்து ஒருவர் கடத்திச் செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையை தூக்கிச் சென்ற நபரின் பெயர் மொஹ்சின் என்பதை கண்டறிந்த போலீசார், அவரை விருந்தாவன் பகுதியில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து குழந்தையை அவர் மதுராவில் உள்ள தனது சகோதரியின் இல்லத்தில் மறைத்து வைத்திருந்ததை அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.