முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்

சிவமொக்காவில் ஜனசங்கல்ப மாநாடு நடந்தது. அந்த மாநாட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-16 16:45 GMT

சிவமொக்கா:-

ஜனசங்கல்ப மாநாடு

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஆனவட்டி நகரில் பா.ஜனதா கட்சியின் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு நடந்தது. மாநாட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தண்டாவதி நீர் பாசன திட்டம் குறித்து ஆந்திர அரசுடன் பேச இருக்கிறேன். மீண்டும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த திட்டம் சில மாற்றங்களுடன் செயல்படுத்த திட்டமிடபட்டு இருக்கிறது. அதற்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரூ.800 கோடி செலவில்...

விரைவில் கச்சவி, மூகூரூ உள்ளிட்ட விவசாய நீர் ஏற்று பாசன திட்டங்கள் ரூ.800 கோடி செலவில் ஜனவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்த நீர்ப்பாசன திட்டங்கள் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, ராகவேந்திரா எம்.பி., எம்.எல்.ஏக்கள் குமார் பங்காரப்பா, அசோக் நாயக், ஹரதாளு ஹாலப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்