"ராஜஸ்தானில் அதானியின் முதலீட்டை முதல்-மந்திரி அசோக் கெலாட் வரவேற்றிருப்பது சரியானது" - ராகுல் காந்தி கருத்து

இவ்வளவு பெரிய முதலீட்டை எந்த முதல்-மந்திரியும் மறுக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-08 23:33 GMT

பெங்களூரு,

அதானி குழுமத்தின் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தில் 10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் தொடங்கப்படும் என்றும், இதற்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி அசோக் கெலாட் வரவேற்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது, அவரிடம் ராஜஸ்தானில் அதானி குழுமத்தின் முதலீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, இவ்வளவு பெரிய முதலீட்டை எந்த முதல்-மந்திரியும் மறுக்கக் கூடாது என்றும் இந்த முதலீட்டை அசோக் கெலாட் வரவேற்றிருப்பது சரியானது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த முதலீட்டுக்காக அதானிக்கு அசோக் கெலாட் முன்னுரிமை அளிக்கவோ, அரசியல் லாபத்திற்காக எதையும் செய்யவோ இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்