மோடி அரசு குறித்து அவதூறாக பேசுவதை சித்தராமையா நிறுத்த வேண்டும்
மோடி அரசு குறித்து அவதூறாக பேசுவதை சித்தராமையா நிறுத்த வேண்டும் என சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான அரசையும், ஆர்.எஸ்.எஸ். பற்றியும் சித்தராமையா தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். சித்தராமையா வாயை திறந்தாலே பொய் பேசுவதையே குறிக்கோளாக வைத்துள்ளார். குறிப்பாக கொரோனா தீவிரமாக பரவிய காலத்தில் சித்தராமையா 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
ஆனால் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பா.ஜனதா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகிறார். எனவே, மோடி அரசு குறித்து அவதூறாக பேசுவதை சித்தராமையா நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனால் தான் காங்கிரசுக்கு பொதுமக்கள் தக்க பாடம் கற்பித்து வருகிறார்கள். இதை மனதில் வைத்துகொண்டு சித்தராமையா, தனது அவதூறு பேச்சை குறைத்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.