சத்தீஸ்கரில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

சத்தீஸ்கர் மாநிலம் ரைகார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம்புரண்டது.;

Update: 2022-08-11 22:34 GMT

கோப்புப்படம்

பிலாஸ்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் ரைகார் ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு சரக்கு ரெயில் தடம் புரண்டது. 4 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்ட அந்த ரெயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தது.

அந்த வழியாக பணிநிமித்தமாக இயக்கப்பட்ட மற்றொரு இரட்டை என்ஜின், எதிர்பாராதவிதமாக ஒரே தடத்தில் வந்துவிட்டதால் சரக்கு ரெயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு ரெயில் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு இறங்கியது. அதிர்ஷ்டவசமாக ரெயில் என்ஜினில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. சரக்கு ரெயில், பொருட்கள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் லேசான சேதம் தவிர பெரிய பாதிப்புகள் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருந்தாலும் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த தடம் அதிகம் ரெயில்கள் இயக்கப்படாத பாதை என்பதால் மற்ற ரெயில்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்