சத்தீஷ்கார், ம.பி., தெலுங்கானா சட்டசபை தேர்தல்; காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியின் 30 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-10-15 05:36 GMT

ராய்ப்பூர்,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சியின் 30 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, பதன் தொகுதியில் இருந்து சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் போட்டியிடுகிறார். துணை முதல்-மந்திரி டி.எஸ். சிங் தியோ, அம்பிகாபூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி தேர்ந்தெடுத்து அறிவித்து உள்ளது. இரண்டாம் கட்டத்திற்கான மற்றொரு பட்டியல் பின்னர் வெளியிடப்படும். இதற்கு முன் சத்தீஷ்காரில் 64 வேட்பாளா்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளா் பட்டியலை பா.ஜ.க. கடந்த திங்கட்கிழமை வெளியிட்டிருந்தது.

இதேபோன்று தெலுங்கானாவில் 55 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, கொடங்கல் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தில் 144 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது. இதில், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்