ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்: 80 மணி நேரத்தையும் தாண்டி தொடரும் மீட்பு பணி...!

சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஒட்டுமொத்த மாநிலமும் ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

Update: 2022-06-14 05:43 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணி 80 மணி நேரத்தையும் தாண்டி நடைபெற்று வருகிறது. ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. ராகுலின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, மீட்பு பணிகளை பார்வையிட்ட கலெக்டர் ஜித்தேன்த்ரா சுக்லா தெரிவித்துள்ளார்.

சிறுவன் சுய நினைவுடன் உள்ளதாக கூறப்படும் நிலையில், குழாய் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஒட்டுமொத்த மாநிலமும் ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் ஒட்டுமொத்த மாநிலமும் ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்