எச்.டி.கோட்டை டவுனில் ஹாயாக உலா வந்த சிறுத்தைகள்

மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை டவுன் பகுதியில் சிறுத்தைகள் ஹாயாக உலா வந்தன.;

Update: 2022-08-02 21:08 GMT

மைசூரு:


மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை டவுனில் மைதானப்பகுதியில் நேற்று முன்தினம் 2 சிறுத்தைகள் புகுந்தது. அங்கு அந்த சிறுத்தைகள் ஹாயாக உலா வந்த வண்ணம் உள்ளன. மேலும் சிறுத்தைகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து கோழிகளை வேட்டையாடி கொன்று வாயில் கவ்வியபடி தெருவில் நடந்து சென்றுள்ளது. அப்போது அப்பகுதி தெருநாய்கள் ஒன்று சேர்ந்து வந்து சிறுத்தைகளை துரத்தின.


இதனால் பயந்துபோய் சிறுத்தைகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டன. இதற்கிடையே சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சுகாஷ் குடோனில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்து. அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிறுத்தை பீதியில் இருந்துவருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்