கோவில் திருவிழாவில் திடீரென சரிந்த தேர்; உயிர் தப்பிய பக்தர்கள் - வைரலான வீடியோ

கர்நாடகாவில் கோவில் திருவிழாவில் தேர் சரிந்து விழுந்த சம்பவத்தில் பக்தர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.;

Update: 2022-11-01 13:13 GMT



சாம்ராஜநகர்,


கர்நாடகாவில் சாம்ராஜநகர் பகுதியில் சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா என்றொரு கோவில் உள்ளது. இதில், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு கோவிலின் தேர் ஊருக்குள் ஊர்வலம் சென்றது.

திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரித்து இருந்தது. தேர் திருவிழாவை காண பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் வந்திருந்தனர்.

இந்த நிலையில், தேர் கோவிலை சுற்றி வந்த சிறிது தூரத்தில் அதன் சக்கரம் முறிந்து உள்ளது. இதனை தொடர்ந்து தேர் சரிந்து விழுந்துள்ளது. எனினும், பக்தர்கள் முன்னெச்சரிக்கையாக அதுபற்றி தெரிந்ததும் ஓடி, தப்பினர். இதுபற்றிய காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்