சமூக வலைதளங்களில் காட்சிப் படமாக தேசிய கொடியை பயன்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோள்

ஆகஸ்ட் 2 முதல் 15 வரை சமூக வலைதளங்களில் காட்சி படமாக தேசிய கொடியை பயன்படுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2022-07-31 08:59 GMT

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் இன்று பல்வேறு தலைப்புகள் குறித்து பேசினார்.

அப்போது பிரதமர் மோடி , ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களின் காட்சி படமாக தேசிய கொடியை (DP) பயன்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையா ஆகஸ்ட் 2 ஆம் தேதி பிறந்ததை நினைவு கூறும் விதமாகவும், நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும் பிரதமர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பேசிய பிரதமர். "சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வேயின் வரலாற்றுப் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம்' என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்