சண்டிகர் மேயர் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி

இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Update: 2024-01-30 09:29 GMT

சண்டிகர்,

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவு பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போட்டியிட்டன. இந்தியா கூட்டணியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மேயர் பொறுப்புக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன.

இந்நிலையில், மொத்தம் பதிவான 36 வாக்குகளில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகளைப் பெற்று தோல்விடைந்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்