உண்மையை பேசுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு தனது அமைப்புகளை பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

உண்மையைப் பேசுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு தனது அமைப்புகளை பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளாா்.;

Update: 2022-06-27 12:56 GMT

கொல்கத்தா,

மராட்டிய எம்.பி.யும், சிவசேனா செய்தித்தொடர்பாளருமான சஞ்சய் ராவத், நிலமோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் நிலையில், உண்மையைப் பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி தொிவித்து உள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், " இன்று மராட்டியத்தில் சிவசேனா தலைவா் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பபட்டுள்ளது. பாஜக ஏன் சாதாரண மக்களை இப்படி துன்புறுத்துகிறது. இது தான் ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழியா? என அவா் தொிவித்து உள்ளாா்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு உண்மையை பேசும் மக்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்துகிறது.

மேலும், பாஜக ஆட்சியின் கீழ் சாதாரண மக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனா். இதனால் கடந்த சில ஆண்டுகளில் தொழிலதிபா்கள் உள்ளிட்ட பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனா். இதனை பாஸ்போா்ட் மற்றும் விசா அலுவலகங்களில் இதை சரிபாா்க்கலாம்" இவ்வாறு அவா் தொிவித்தாா்.

Tags:    

மேலும் செய்திகள்