காஷ்மீரில் 1800 ராணுவ வீரர்கள் குவிப்பு: காரணம் என்ன?

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1800 வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.;

Update: 2023-01-04 18:31 GMT

புதுடெல்லி,

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான மாவட்டங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 1800 வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில வாரங்களாக காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி, ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

இந்த தாக்குதல்களில் நமது வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்கள் குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள இன்று மத்திய ரிசர்வ் படை பிரிவு போலீசார் 1800 பேர் காஷ்மீரின் பூஞ்ச், மற்றும் ரஜோரி, அப்பர் தான்கிர ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்