குனோ தேசிய பூங்காவில் வாழும் சிறுத்தைகளை கண்காணிக்க 9 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு!

9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.;

Update: 2022-10-07 08:32 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த 17-ந்தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டிருந்தன.

அந்த சிறுத்தைகளை மத்தியபிரதேச மாநிலம் குணோவில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார். நமது நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து ஐந்து ஆண் சிறுத்தை குட்டிகளும் மூன்று பெண் சிறுத்தை குட்டிகளும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

முன்னதாக செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், கண்காணிப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சிறுத்தைகளை மக்கள் எப்போது பார்க்க முடியும் என்பது முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

இந்த நிலையில், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் வாழும் சிறுத்தைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிறுத்தைகளின் முன்னேற்றம் மற்றும் சுகாதார நிலையை கண்காணிப்பதில் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்