பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை - மத்திய மந்திரி பக்வந்த் குபா
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருவதாக மத்திய இணை மந்திரி பகவந்த் குபா தெரிவித்துள்ளார்.;
கிரேட்டர் நொய்டா,
கிரேட்டர் நொய்டாவில் 'புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்தியா எக்ஸ்போ'வின் 15-வது பதிப்பின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணை மந்திரி பக்வந்த் குபா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, இனி வரும் ஆண்டுகளில் கார்பன் வெளியேற்றம் இல்லாத இந்தியாவாக மாற்ற மத்திய அரசு ஏற்கனவே இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில்துறையினர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் விரைவாக இலக்கை அடைய உதவும்.
சூரியசக்தி , காற்று மற்றும் மின் ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா தீவிரமாக வளர்ந்து வருகிறதுபசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் அளவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.