தொழிலதிபர் கவுதம் அதானிக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல்

கவுதம் அதானிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தெரிவித்து இருந்தது.

Update: 2022-08-17 13:58 GMT

Image courtesy: AFP

மும்பை,

தொழிலதிபர் கவுதம் அதானிக்கு சிஆர்பிஎப் கமாண்டோக்கள் மூலம் இசட் பிரிவு விஐபி பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கவுதம் அதானிக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்புக்கு மாதம் ரூ.15 முதல் ரூ.20 லட்சம் செலவாகும். இந்த செலவுகளை அதானி குழுமமே ஏற்றுக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுதம் அதானிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் அளித்தது. இதையடுத்து, அவருக்கு இந்த விஐபி பாதுகாப்பு வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்