திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனத்துக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையம் குறைப்பு

திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனத்துக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் மையம் குறைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Update: 2023-01-05 02:22 GMT

திருமலை,

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வருகிற 11-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடந்து வருகிறது. கோவிலில் வைகுண்ட துவாரத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு திருப்பதியில் 9 மையங்களில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி தரிசனம் முடிந்து, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்கள் தரிசனம் (துவார தரிசனம்) செய்வது மட்டும் நடந்து வருகிறது. துவார தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனவே இலவச தரிசன டோக்கன்கள் நேற்று (புதன்கிழமை) முதல் திருப்பதி அலிபிரி பூதேவி வளாகம், சீனிவாசம் விடுதி வளாகம், விஷ்ணு நிவாசம் விடுதி வளாகம், கோவிந்தராஜசாமி 2-வது சத்திரம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இதை பக்தர்கள் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்