நள்ளிரவு வரை புத்தாண்டு கொண்டாட அனுமதி

சிக்கமகளூருவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நள்ளிரவு வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கி மாவட்ட கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-12-28 18:45 GMT

சிக்கமகளூரு:-

கொரோனா பரவல்

சிக்கமகளூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:-

கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டு கொரோனா முதல் அலை பரவியது. அந்த ஆண்டு புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் தொற்று அதிகரித்தது. அதன் பின்னர் 2 ஆண்டுகள் புத்தாண்டு கொண்டாட கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா 4-வது அலையாக பி.எப்-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. இந்த கொரோனா அலையில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்க மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பாக புத்தாண்டு தினத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

சிக்கமகளூரு மாவட்டத்திலும் மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கவேண்டும். அதன்படி தியேட்டர்கள், மால்கள், பூங்காக்கள், பஸ், ரயில் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சானிடைசர், காய்ச்சல் பரிசோதனை செய்யும் வழிகாட்டு நெநிமுறையை கிடைப்பிடிக்கவேண்டும். சமூக இடைவெளியுடன் மக்கள் நடமாடவேண்டும். தேவையில்லாத கூட்டங்களை மக்கள் தவிர்க்கவேண்டும்.

நள்ளிரவு வரை அனுமதி

வழக்கமாக 31-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி அதிகாலை வரை புத்தாண்டு கொண்டாடப்படும். இந்த புத்தாண்டு கொண்டாடத்திற்கு இந்த முறை சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாடவேண்டும். இந்த விதிமுறையை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல கொரோனா 4-வது அலையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராகியுள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

அனைத்து கருவிகளும் செயல்பாடுகளில் இருக்கிறதா என்பதை மாவட்ட மற்றும் தாலுகா நிர்வாக அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும். இதில் யாரும் அலட்சியமாக செயல்படகூடாது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை பெற்று கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்