சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-12 13:21 GMT

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13 -ம் தேதி நிறைவடைகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி நிறைவடைகிறது.

ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ. தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.cbse.gov.in, cbse.nic.in, ஆகிய சி.பி.எஸ்.இ-யின் அதிகாரபூர்வ இணையதளங்களில் பொதுத்தேர்வு அட்டவணையை மாணவ-மாணவிகள் பார்க்கலாம் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.





Tags:    

மேலும் செய்திகள்