மணிப்பூர் விவகாரம்: மேலும் 9 வழக்குகள் பதிவு செய்த சி.பி.ஐ.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மேலும் 9 வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.;

Update: 2023-08-13 18:47 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. 4 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் இதில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை நிர்வாணப்படுத்தி சாலையில் இழுந்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர்.

இதுதொடர்பான வீடியோக்கள் நாடு முழுவதும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 8 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை உள்பட மேலும் 9 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரம் அடையும் என சி.பி.ஐ. உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்