தேஜஸ்வி யாதவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய சிபிஐ
நில் மோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலானகாலகட்டத்தில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல்-மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தி உள்ளது.
இந்த சூழலில் நிலமோசடி வழக்கில் தேஜஸ்வி யாதவுக்கு சிபிஐ இரண்டாவது முறையாக இன்று சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக தேஜஸ்வி யாதவின் டெல்லி வீட்டிலும் அமலாக்கத்துறாஇ சோதனை நடந்தது. நேற்றைய சோதனையில், ரூ. 53 லட்சம் ரொக்கம், 540 கிராம் தங்கம், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தேஜஸ்வி யாதவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள சிபிஐ, அவருக்கு கடந்த மாதம் 4ம் தேதி சம்மன் அனுப்பியது. எனினும், விசாரணைக்கு தேஜஸ்வி யாதவ் ஆஜராகவில்லை. இதையடுத்து, சிபிஐ இன்று மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.