மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வீட்டில் சிபிஐ சோதனை - ரு.20 கோடி பறிமுதல்

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

Update: 2023-05-02 15:19 GMT

டெல்லி,

மத்திய ஜல் சக்தி (குடிநீர்) அமைச்சகத்தின் கீழ் நீர் மற்றும் மின்சார ஆலோசனை சேவைகள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராஜிந்தர் குமார் குப்தா. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், ராஜிந்தர் குமார் குப்தாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ராஜிந்தர் குமாரின் வீட்டில் கணக்கில் வராத 20 கோடி ரூபாய் பணத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ராஜிந்தர் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்