டெல்லி துணை முதல்-மந்திரி வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை

டெல்லி துணை முதல்-மந்திரி வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-19 03:35 GMT

டெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை முதல்-மந்திரியாக மனிஷ் சிசோடியா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், மனிஷ் சிசோடியா வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மனிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தனது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துவது தொடர்பாக மனிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சிபிஐ வந்துள்ளது. லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு எதிர்காலத்தை உருவாக்கும் நாங்கள் நேர்மையானவர்கள். நல்ல செயல்கள் செய்பவர்களுக்கு இது போன்ற தொல்லைகள் கொடுக்கப்படுவது இந்த நாட்டில் துரதிர்ஷ்டவசமானது. இதனால் தான் நமது நாடு இன்னும் நம்பர் 1 நாடாக மாறவில்லை' என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்