டெல்லி துணை முதல் மந்திரி உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
மணிஷ் சிசோ டியாவிற்கு நெருக்கமானவராக அறியப்படும் நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியை மதுபான வியாபாரி ஒருவர் கொடுத்துள்ளதாக சிபிஐயின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா உள்ளார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மணிஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் நிறுவனத்திற்கு மதுபான வியாபாரி ஒருவர் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.