மணிப்பூர் கலவர வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - சி.பி.ஐ. நடவடிக்கை

2 பழங்குடியின பெண்களை மானபங்கப்படுத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2023-10-16 20:55 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 3-ந் தேதி, மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதில், 180 பேர் பலியானார்கள்.

கலவரத்தின்போது 2 பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ கடந்த ஜூலை மாதம் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு, அவ்வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.

அந்த சம்பவம் தொடர்பாக, ஒரு சிறுவன் உள்பட 7 பேரை மணிப்பூர் போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். சி.பி.ஐ. விசாரணையில் 7 பேரும் அதில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் 6 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிறுவன் மீது அறிக்கை சமர்ப்பித்தது. தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்