சைபர் குற்றங்கள்: நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை

சைபர் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் பல பகுதிகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

Update: 2022-10-04 13:46 GMT

புதுடெல்லி,

நாட்டில் இணைய வழியிலான சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிரித்து வருகிறது. இணைய வழியில் பண மோசடி, தகவல் திருட்டு உள்பட பல குற்றங்களால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் சிபிஐ இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. மாநில போலீசாருடன் இணைந்து நாடு முழுவதும் மொத்தம் 105 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் மற்றும் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான எப்.பி.ஐ. கொடுத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் சைபர் குற்றங்கள் தொடர்பாக நாட்டின் 105 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    

Tags:    

மேலும் செய்திகள்