'என்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 56 கேள்விகள் கேட்டனர்' - கெஜ்ரிவால் தகவல்
மதுபான கொள்கை தொடர்பாக தன்னிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 56 கேள்விகள் கேட்டதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை முடித்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மதுபான கொள்கை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் என்னிடம் சுமார் 56 கேள்விகள் கேட்டனர். அவர்கள் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் நான் பதில் அளித்தேன்' என்று தெரிவித்தார்.
இந்த ஊழல் வழக்கு பொய்யானது என கூறிய கெஜ்ரிவால், இந்த வழக்கில் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லைஎன்றும் உறுதிபட கூறினார்.