காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கிறது.!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று நடக்கிறது.

Update: 2023-04-11 03:33 GMT

புதுடெல்லி,

கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணை விவகாரம் விவாத பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் மேகதாது அணை விவகாரத்தை கர்நாடகா எழுப்பும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதம் தொடங்கும் பாசன ஆண்டுக்கான நீர் திறப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்