காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-11 14:20 GMT

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது.

ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில், தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. தமிழகத்திற்குரிய தண்ணீரை கர்நாடகா தரமறுத்ததையடுத்து தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்ததால் கூட்டத்திலிருந்து தமிழக அதிகாரிகள் பாதியில் வெளியேறிய நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்