சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதிய உணர்வு அதிகரித்து உள்ளது - சசிதரூர்
சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததைவிட இப்போது சாதிய உணர்வு அதிகரித்து உள்ளது என சசிதரூர் எம்.பி. கூறியுள்ளார்.;
ஆழமாக வேரூன்றி உள்ளது
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய சசிதரூர் எம்.பி. நேற்று மும்பையில் நடந்த டாடா இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் எழுதிய அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
அம்பேத்கர் சாதிய முறையை முற்றிலும் அழிக்க விரும்பினார். ஆனால் தற்போது அரசியல் கட்சிகளில் சாதிய அமைப்புகள் ஆழமாக வேரூன்றும் என்பதை உணர்ந்து இருந்தால் அவர் அதிர்ச்சி அடைந்து இருப்பார்.
சாதிய உணர்வு அதிகரிப்பு
தீண்டாமை, பாகுபாடுக்கு எதிரான அரசியல் கட்சிகள் சாதி பெயரை சொல்லி தான் ஓட்டு கேட்கின்றன. சாதிய அமைப்பு அழிக்கப்படுவதில் இருந்து மிக தொலைவில் உள்ளது. நவீன மயமனால் சாதி ஒழியும் என அம்பேத்கரும், நேருவும் நினைத்தார்கள். சுதந்திற்கு முன் இருந்ததைவிட இப்போது சாதிய உணர்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.