சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்திய பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-13 18:45 GMT

பெலகாவி:

பெலகாவி மாவட்டம் குடச்சி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பி.ராஜீவ். இவருக்கே மீண்டும் இந்த தொகுதியில் பா.ஜனதா வாய்ப்பு அளித்துள்ளது. இவர் அந்த தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி ராய்பாக் அருகே கரிசித்தேஸ்வர் கோவிலில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது இவர் சிறுவர்களுக்கு பா.ஜனதா கட்சி கொடி நிற டீ-சர்ட் அணிவித்துவிட்டு, கட்சி சால்வையை கழுத்தில் போட்டுவிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வைத்திருந்தார். சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகாரை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதியை மீறியதாக பி.ராஜீவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் காக்வாட் தொகுதி காங்கிரஸ் வேட்பார் ராஜூ காகே தனது பிரசாரத்தின் போது சிறுவர்களுடன் ஓட்டு சேகரித்தார். இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் காக்வாட் போலீசார் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக ராஜீ காகே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்