தாம்பூல பையில் மது பாட்டில் விநியோகம் செய்யப்பட்ட விவகாரம்- அபராதம் விதிப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட தாம்பூல பையில் மது பாட்டில் சேர்த்து கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2023-06-02 09:54 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில், தாம்பூல பையில் தேங்காய், பழம், வெத்தலை, பாக்கு ஆகியவற்றுடன் மது பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

ஆனால் மது பாட்டில் தாம்பூல பையை சிலர் இரண்டு கொடுங்கள் என்று கேட்டுக் வாங்கியும் சிலர் சரக்கு பாட்டில் வேண்டாம் வெறும் தாம்பூல பையை மட்டும் கொடுங்கள் என்று வாங்கி சென்றனர். தாம்பூல பையில் மதுபாட்டில் கொடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

திருமணத்திற்கு வந்தவர்களை குஷிப்படுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து தாம்பூல பையில் மதுபானம் சேர்த்து வழங்கிய நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்