டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம்
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான வழக்கில், மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.;
புதுடெல்லி,
டி.டி.வி.தினகரனுக்கு எதிரான பெரா வழக்கில் அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, டி.டி.வி.தினகரனின் பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் தேவை என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி, இந்திய தூதரகத்துக்கு அனுப்பிய ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற டி.டி.வி.தினகரனின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்றும் வாதிடப்பட்டது.
வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக, விளக்க மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு 3 வாரம் அவகாசம் அளித்து, விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைத்தது.