அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு - இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 2 மாதத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை 2 மாதத்திற்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அதே வேளை வழக்கு விசாரணையை விரைந்து நடத்த அனிதா ராதாகிருஷ்ணன் ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில், இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்யலாம் என்றும் கூறி, மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.