கார் கவிழ்ந்து விபத்து; விவசாயி சாவு
நவலகுந்து அருகே கார் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா திர்லாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா (வயது 45). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் தனது காரில் வெளியே சென்றார்.
அப்போது அவர் காரை அதிவேகமாக ஓட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் குசகல்லா-திர்லாபுர சாலையில் உள்ள பியாட்டி கிராமம் அருகே சென்றபோது திடீரென கார் சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் ெநாறுங்கியது. இதில் காரின் இடுபாடுகளில் சிக்கி சிவப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.