விபத்தில் கார் டிரைவர் பலி; டேங்கர் லாரியில் பெட்ரோல் கசிவு

விபத்தில் கார் டிரைவர் பலியானார். டேங்கர் லாரியில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது.

Update: 2022-08-14 21:14 GMT

பெலகாவி: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சவதத்தியில் நேற்று பெட்ரோல் டேங்கர் லாரியும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் கார் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, வாளி, பாத்திரங்களில் பெட்ரோலை போட்டிப்போட்டு பிடித்து சென்றனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் டேங்கரில் ஏற்பட்ட கசிவை சரி செய்தனர். விபத்து பற்றி சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்