பாலத்தில் கார் மோதல்: அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வின் சித்தப்பா சாவு
பாலத்தில் கார் மோதிய விபத்தில் அரவிந்த் பெல்லத் எம்.எல்.ஏ.வின் சித்தப்பா உயிரிழந்தார்.
உப்பள்ளி;
தார்வார் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அரவிந்த் பெல்லத். இவரது சித்தப்பா சிவப்பா சிவண்ணா பெல்லத் (வயது 82). இவர் நேற்று முன்தினம் தார்வார் கலெக்டர் அலுவலகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி அங்கிருந்த பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவப்பா பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தார்வார் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவப்பாவின் உடலுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.