கே.கே.நகர் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு - மத்திய மந்திரியிடம் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை

மத்திய மந்திரி மான்சுக் மாண்டவியாவை சந்தித்து தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.;

Update:2024-07-05 21:36 IST

புதுடெல்லி,

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், டெல்லியில் இன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய மந்திரியிடம் தமிழச்சி தங்கபாண்டியன் வழங்கினார்.

அந்த மனுவில், தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதிநவீன ஆய்வுக்கூடம் மற்றும் தனி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை உருவாக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்