தசரா விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களின் உரிமம் ரத்து

தசரா விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் பஸ்களில் சோதனை நடத்துவதற்காக 10 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-30 22:03 GMT

பெங்களூரு: தசரா விடுமுறையையொட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும் பஸ்களில் சோதனை நடத்துவதற்காக 10 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பஸ்களின் உரிமம் ரத்து

கர்நாடகத்தில் தசரா விழா கோலாகமாக கொண்டாடப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தசரா விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லும் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களில் சோதனை நடத்துவதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

5-ந் தேதி வரை சோதனை

இந்த குழுவினர் மெஜஸ்டிக், கலாசிபாளையம், மெஜஸ்டிக் சுற்றியுள்ள பகுதிகள், சாந்திநகர், சேட்டிலைட் பஸ் நிலையம், பீனியா உள்ளிட்ட பகுதிகளில் அந்த குழுவினர் ரோந்து செல்வதுடன், தனியார் பஸ்களில் சோதனை உள்ளனர். பயணிகளிடமும் கட்டணம் குறித்து கேட்டு, தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

அதே நேரத்தில் தசரா விடுமுறையையொட்டி, இந்த 10 குழுவினரும் வருகிற 5-ந் தேதி வரை பெங்களூருவில் சோதனை நடத்த உள்ளனர். மேலும் தனியாா் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி தெரியவந்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் 9449863429, 9449863426 ஆகிய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்