கனடா பெண்ணை கரம்பிடித்த விஜயாப்புரா என்ஜினீயர்
கனடா பெண்ணை, விஜயாப்புரா என்ஜினீயர் ஒருவர் கரம் பிடித்துள்ளார்.
விஜயாப்புரா: விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் சிம்மலகி. இவர் வடஅமெரிக்க நாடான கனடாவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கும் அங்கு பணியாற்றி வரும் கனடாவை சேர்ந்த சாராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய பெற்றோரின் சம்மதம் பெற்றனர். இதையடுத்து ரவிக்குமார்-சாராவின் திருமணம் விஜயாப்புரா டவுன்ஹாலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்திய முறைப்படி இருவரின் திருமணம் நடந்தது.
சாரா புடவை அணிந்து இந்திய பெண் போல் காட்சி அளித்தார். மணமக்களை இருவரின் பெற்றோர்களும், குடும்பத்தினரும், உறவினர்களும் வாழ்த்தினர்.